தமிழ்நாடு

கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்கள் யாரையும் வெளியேற்றவில்லை: காவல்துறை

Rasus

கூவத்தூர் விடுதிக்குள் பாதுகாப்பிற்காக மட்டுமே போலீஸ் உள்ளதாகவும், எம்எல்ஏக்கள் யாரையும் வெளியேற்றவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பித்து வந்ததாகவும் தன்னை போல மற்ற எம்.எல்.ஏக்களும் சிறைவைக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், விடுதியினுள் நுழைந்த காவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கூவத்தூர் விடுதிக்குள் பாதுகாப்பிற்காக மட்டுமே போலீஸ் உள்ளதாகவும், எம்எல்ஏக்கள் யாரையும் வெளியேற்றவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏக்கள் அல்லாத மற்றவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.