சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான எம்.எல்.ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் ஜாமீன் வழங்கக்கோரி கருணாஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னையில் ஐபிஎல் போட்டியின்போது கிரிகெட் ரசிகர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதிலும் ஜாமீன் கிடைக்கும் பட்சத்தில் கருணாஸ் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.