திமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் நாளை காலை சென்னை வரவேண்டும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாளை நடைபெற உள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், உடனடியாக சட்டமன்றக் கூட்டத் தொடரை கூட்டுமாறு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உள்ளாட்சித் தேர்தல், குடியரசுத்தலைவர் தேர்தல், தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.