தமிழ்நாடு

”தமிழக ஊர்தி நிராகரிப்பு வேதனையளிக்கிறது”- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நிவேதா ஜெகராஜா

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி, மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவதற்கு மத்திய அரசு மறுத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தனது அக்கடிதத்தில் அவர், “தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக, மாநில அதிகாரிகள் 3 முறை குழுவிடம் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசின் குழுவினர் நிராகரித்திருப்பதை ஏற்க முடியவில்லை. அதுவும் 4வது சுற்று கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலேயே குடியரசு தின அணிவகுப்பு பட்டியலிலிருந்து பெயரை நீக்கியிருப்பது வேதனை தருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.