8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், விருப்பு, வெறுப்பற்ற நேர்மைத் தன்மையுடன், கள நிலவரங்களை உள்ளது உள்ளபடி புதிய தலைமுறை மக்களுக்கு வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பேரிடர் நேரங்களில் கைகொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பல்லாண்டுகள் சிறப்புடன் செயல்பட திமுக சார்பில் வாழ்த்துவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்லும் பணியில் ஊடகங்களின் பணி மகத்தானவை என்றும், அந்தப் பணிக்கு திமுக என்றும் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகத்துறையில் தனக்கென்ற தனி அடையாளத்துடன் சிறந்து விளங்கும் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் புதிய தலைமுறை நிறுவனத்தாருக்கும் அதன், வெற்றியில் பங்கு பெற்ற உழைப்பாளிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.