நாளை அதிகாலை சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் வகையில், உலக நாடுகளிலேயே முதல்முறையாக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா ஏவ உள்ளது. நாளை அதிகாலை 2.51 மணியளவில் சந்திரயான்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இஸ்ரோ மற்றும் சந்திரயான்-2 விண்கலத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் எதிர்காலம் அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை சார்ந்தே இருக்கும். மேலும் திமுகவின் சார்பிலும் எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.