தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலரஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலரஞ்சலி

webteam

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முதுபெரும் அரசியல் ஆளுமையான திமுக தலைவர் கருணாநிதியின் உடல், அரசு மரியாதையுடன் சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியா விடை அளித்தனர். கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு கூடாரம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக வழி ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இன்று காலை கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர். திமுக தொண்டர்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்த அண்ணா நினைவிடத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.