யார்யாரோ அமர்ந்து விட்ட முதலமைச்சர் பதவியில் நானும் அமர வேண்டுமா என்ற சிந்தனை தனக்கு வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், யார் யாரோ முதலமைச்சராக இருந்து இருக்கிறார்கள். இடையில் யார் யாருக்கோ முதலமைச்சராகும் வாய்ப்பும் வந்தது. இப்படிப்பட்ட இடத்தில் நான் இருக்க வேண்டுமா என்ற சிந்தனை தனக்கு வருவதாக கூறினார்.
தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்ல. நாடு வளர்ச்சிக்கும், இன வளர்ச்சிக்கும் பாடுபடுவதே தனது குறிக்கோள் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.