தமிழ்நாடு

கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - மு.க.ஸ்டாலின்

கருணாநிதி நலமுடன் இருக்கிறார் - மு.க.ஸ்டாலின்

webteam

கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். சிகிச்சைக்கு பிறகு அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது; வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. பன்னீர்செல்வம் பேட்டிகொடுக்கும் போது அரசுக்காக நான் வரவில்லை. எனது சகோதரருக்கு ஹெலிகாப்டர் கொடுத்து உதவியதற்காக நன்றி சொல்ல வந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ராணுவ விமான ஹெலிகாப்டரை தனி மனிதருக்கு வழங்கப்பட்டது மர்மமாக உள்ளது. இந்த செயலுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும். பன்னீர்செல்வம் மட்டுமல்ல விரைவில் முதலமைச்சர் பழனிசாமி மீதும் வழக்கு விசாரணை நடைபெறும். எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு மட்டுமல்ல, கொள்ளையடிக்கவும் தயாராகிவிட்டார்” என்று தெரிவித்தார்.