முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனக்குள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து மக்கள் நலனுக்கான ஆட்சி நடத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகம் இதுவரை காணாத வகையில், ஒன்பது மாதங்களுக்குள் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக தேர்வு செய்து ஹாட்ரிக் சாதனை படைத்திருகிறது. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். இதை பல்வேறு தளங்களில் திமுக வலியுறுத்தி வருகிறது. புதிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தனது பதவிக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுவதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்திட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தமிழகத்தை சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும், ஒரு செயல்படும் நல்ல அரசு நிர்வாகத்தை இந்த புதிய அரசின் மூலம், தமிழகம் பெறுமா? என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.