தமிழ்நாடு

கருணாநிதிக்காக 21 திமுகவினர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்

கருணாநிதிக்காக 21 திமுகவினர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்

Rasus

திமுக தொண்டர்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் 21 பேர் இறந்துள்ளார்கள் என்ற செய்தி கேட்டு உறைந்து போயிருப்பதாக கூறியுள்ளளார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை மனதில் தாங்கி அண்ணா, கருணாநிதிக்கு பெருமை சேர்க்க வேண்டுமே அன்றி, திமுக தொண்டர்கள் யாரும் இன்னுயிரை இழந்திடும் எந்தவித முயற்சியில் ஈடுபட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.