தமிழ்நாடு

“நல்லகண்ணுவுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

“நல்லகண்ணுவுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்”- மு.க.ஸ்டாலின்

Rasus

முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவிற்கு நெருக்கடி ஏற்படுத்தாமல் தமிழக அரசு உடடினயாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டமும், தியாகமுமே வாழ்க்கை முறையாக கொண்ட நல்லகண்ணு, சென்னை திநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 12 வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  தற்போது புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்த உள்ளதாக கூறி, நல்லகண்ணு வீட்டை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டதால் அவரும் வெளியேறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசை மதிக்கும் ஒரு தலைவரை உடனடியாக வெளியேறச் சொன்னது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், 94 வயதான அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் உடனடியாக வீடு ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.