எதற்கும் அஞ்சாமல், கவலைப்படாமல் எதையும் சந்திக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர் ஜெயலலிதா என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில், ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர், கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, அவரது இயக்கத்திற்கு தலைமை தாங்கி வெற்றிபெறச் செய்தவர் ஜெயலலிதா என்று ஸ்டாலின் கூறினார்.
கடந்த 1989-ம் ஆண்டு இருவருமே ஒரே கால கட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வாகி, அவைக்கு காலடி வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், பல்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாகவே அமைந்திருப்பதாக தெரிவித்தார். எதற்கும் அஞ்சாமல், கவலைப்படாமல் எதையும் சந்திக்கக் கூடிய ஆற்றலை பெற்று ஜெயலலிதா விளங்கியதாகவும் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.