டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், சுயநினைவின்றி அவர் இருப்பதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
அப்போது, பிரணாப் முகர்ஜி விரைந்து நலம்பெற வேண்டும் எனும் தமது விழைவினைத் தெரிவித்ததாகவும், மருத்துவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் மீது, தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.