தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் பணிகளை தொடங்க பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

மதுரையில் எய்ம்ஸ் பணிகளை தொடங்க பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

Sinekadhara

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவில் தொடங்கவேண்டும் என பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து எந்த பணிகளும் அங்கு நடைபெறாத நிலையில், அங்கு கட்டட பணிகளை விரைவில் தொடங்கவேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்கவேண்டும். பணிகளை செயல்படுத்த அலுவலர்களுக்கு முழு அதிகாரங்களை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.