தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, படுகாயமுற்ற குடும்பங்களுக்கு அரசுப்பணி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, படுகாயமுற்ற குடும்பங்களுக்கு அரசுப்பணி

JustinDurai

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், கொடுங்காயமுற்றவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 17 பேருக்கு பணி நியமன ஆணையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.