தமிழ்நாடு

மாநில அரசு அதிகாரங்களைப் பிடுங்குவதா?: ஸ்டாலின் காட்டம்

மாநில அரசு அதிகாரங்களைப் பிடுங்குவதா?: ஸ்டாலின் காட்டம்

webteam

மாநில உரிமைகளைப் பறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை செயலிழக்க வைக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஈடுபடக்கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அறிவிக்கும் பொறுப்போ, அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை சேர்க்கும் பொறுப்போ மாநில அரசுக்கு மட்டுமே இருக்கிறது. இத்தகைய சூழலில், தற்போது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை குடியரசுத் தலைவர் தயாரிப்பார் என்று கூறுவது மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும் செயலாகும். பிற்படுத்தப்பட்டோருக்கு புதிதாக மத்திய அரசு ஒரு பட்டியலை தயாரிக்கப் போகிறது என்றால், தற்போது மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களின் கதி என்ன? தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிப்பது பாராட்டத்தக்கது. என்ற போதிலும்,, மாநில அரசுகளின் அதிகாரத்தை ஒரே சட்டத் திருத்தத்தின் மூலம் பிடுங்கிக் கொள்ளும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு ஈடுபடக் கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.