தமிழ்நாடு

“போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை” - ஸ்டாலின் விமர்சனம்

“போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை” - ஸ்டாலின் விமர்சனம்

webteam

அரசு மருத்துவர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதை விடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கொடுங்கோன்மை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டியவர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஏற்புடையது அல்ல என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடல‌ம் என நினைக்காமல், நோயாளிகளின் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.