தமிழ்நாடு

ரேஷன் கடைகள் முன்பாக திமுக ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகள் முன்பாக திமுக ஆர்ப்பாட்டம்

webteam

ரேஷன் கடைகளில் அத்தியாவசப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வரும் 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 89 பேரும், தங்களது தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை என்பது உறுதியாகி இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இதையடுத்து, ரேஷனில் அனைத்துப் பொருள்களும் தங்கு தடையின்றி கிடைக்கவும், அதிமுக அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பாக வரும் 13ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.