தமிழ்நாடு

விவசாயிகள் தற்கொலை: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்

விவசாயிகள் தற்கொலை: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்

webteam

வறட்சியால் 120 விவசாயிகள் ‌உயிரிழந்த நிலையில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வருடம் கூட உரிய காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் வறட்சி நிலவுவதாகவும் விவசாயிகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வறட்சியால் 120 விவசாயிகள் ‌உயிரிழந்த நிலையில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் கூறியுள்ளார். வறட்சியால் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் நிதி உதவி பெற்ற ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க‌ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக கருதி நிதியுதவி கோரும் மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.