தமிழ்நாடு

இணையத்தை கலக்கும்‘ஆட்சியர் ரோஹிணி’

இணையத்தை கலக்கும்‘ஆட்சியர் ரோஹிணி’

webteam

சேலம் ஆட்சியர் ரோஹிணி தாம் பதவியேற்ற நாள் முதலே தமிழக மக்கள் மற்றும் ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறார். இதற்கான காரணம் அறிய முயன்றபோது அது சற்று வியப்பை அளித்தது.

ரோஹிணி ஐஏஎஸ்… சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர். 1970ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை 170 ஆட்சியர்களை கண்ட சேலம் மாவட்டம் முதலாவதாக ஒரு பெண் ஆட்சியரை பெற்றுள்ளது. 32 வயதாகும் ஆட்சியர் ரோஹிணி, மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் விவசாயியின் மகளாக பிறந்தவர். அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பு, அரசுக்கல்லூரியில் பொறியியல் பட்டம் முடித்த இவர் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்காக எந்த பயிற்சி வகுப்புகளுக்குமே சென்றதில்லை என்பது தனிச்சிறப்பு

பிறந்தது மகாராஷ்ட்ர மாநிலம் என்றாலும் 9 ஆண்டுகளாக தனக்கு தமிழ் கற்றுத்தந்த மதுரையை தாம் மிகவும் நேசிப்பதாக பூரிப்படைகிறார். மதுரைத் தமிழில் பேசி மக்களிடம் குறைகளை கேட்டறிவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தரையில் அமர்ந்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டது உள்ளிட்டவை அவருக்கு மக்களிடம் நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகமாக ஆட்சியர் ரோஹிணி பேசப்பட்டு வருகிறார்.