திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரதமர் அலுவலகத்துக்கு மிஸ்டு கால் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழகம் முழுவதும் போரட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அறவழியில் போராடிவந்த மாணவர்கள் மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சில இடங்கள் மாணவர்கள், இளைஞர்கள் நூதன போராட்டமும் நடத்தி வருகின்றனர். திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடிய மாணவர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு மிஸ்டு கால் கொடுத்து நூதனமாக போராடி வருகின்றனர்.