கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, ஆனந்த் வெங்கடேஷ்  file image
தமிழ்நாடு

”3 நாட்களாக தூங்கவில்லை” - அமைச்சர்கள் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி!

”சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை படித்தபின் 3 நாட்களாக தூங்கவில்லை” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

PT WEB

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்தது.

அதன்படி, ”இவ்வழக்கிலிருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை படித்தபின் 3 நாட்களாக தூங்கவில்லை” என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.