தமிழ்நாடு

மாதவரத்தில் அமைச்சர்கள் காமராஜ், பென்ஜமின் ஆய்வு

மாதவரத்தில் அமைச்சர்கள் காமராஜ், பென்ஜமின் ஆய்வு

webteam

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர்கள் காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக மாதவரம் மண்டல அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வெள்ள நீரை துரிதமாக வெளியேற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அமைச்சர்கள் அறிவுறுத்தினர். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தபோதிலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.