தமிழ்நாடு

ரூபெல்லா தடுப்பூசி முகாம்: சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

ரூபெல்லா தடுப்பூசி முகாம்: சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

webteam

சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ‌மீசெல்ஸ்- ருபெல்லா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அப்போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தொற்றுநோய்த் தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் உடனிருந்தனர். ‌மேலும், உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐநா மையம் ஆகியவற்றின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தடுப்பூசி போட்டவர்களும் தற்போது இந்த ஊசியை ‌போட்டுக்கொள்ளலாம் என்றும், காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அடுத்த மாதம் த‌டுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்‌பட்டுள்ளது. 9 மாதம் முதல் 15 ‌வயது வரையிலான குழந்தைக‌ளுக்கு ‌‌இன்று முதல் 28ஆம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.