தமிழ்நாடு

கனமழையால் தண்ணீர் தேங்குகிறது: அமைச்சர் விளக்கம்

கனமழையால் தண்ணீர் தேங்குகிறது: அமைச்சர் விளக்கம்

webteam

தமிழகத்தில் கனமழை பெய்யும் இடங்களிலேயே மழைநீர் தேங்கியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாதாரண மழை பெய்தால் மழைநீர் தேங்காது என்று கூறினார். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்ப்பட்டு வருவதாக கூறினார். ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் கூறினார்.