சட்டப்பேரவையில் சபாநாயகரின் நடவடிக்கையை அமைச்சர் துரைமுருகன் நயம்பட விமர்சித்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி பேசும்போது, நானும் ஒரு ஆசிரியர், நீங்களும் ஒரு ஆசிரியர் என்பதால் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, நாமெல்லாம் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவர்கள் என குறிப்பிட்டு கூடுதல் நேரம் வழங்குவதாக கூறுகிறீர்கள், பாமக உறுப்பினர் ஜி.கே.மணியிடம் நாமெல்லாம் ஆசிரியர் என்று கூறி கூடுதல் நேரம் வழங்குவதாக கூறுகிறீர்கள், நெல்லைக்காரர்கள் வந்தால் அவர்களிடம் உறவு கொண்டாடுகிறீர்கள். இதனை எப்படி பார்ப்பது என சபாநாயகர் அப்பாவுவை பார்த்து கேட்டார். இதனால் சட்ட சபையே கட்சி பேதமின்றி சிரிப்பலையில் மூழ்கியது.