தமிழ்நாடு

“75% தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு சட்டம் என்னாச்சு?‘’ - அமைச்சர் தங்கம் தென்னரசு கலகல பதில்

சங்கீதா

“விருந்துக்கு போனால் பாயசம் கடைசியாக தான் வரும்..பாயசம் வரும் வரை காத்திருங்கள்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை அளித்து பேசும்போது, “முன்னாள் அமைச்சர் முனுசாமி பேரவையில் பேசியபோது, உங்கள் தேர்தல் அறிக்கையில் 75 சதவிகித தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு என்று சட்டம் கொண்டு வருவீர்கள் என சொன்னீர்கள், அது என்னாச்சு எனக் கேட்டார்.

நாங்கள் ஆட்சிக்கு இப்போது தான் வந்துள்ளோம், உண்மையை தான் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தோம். விருந்துக்கு போனால் முதலில் சாம்பர், ரசம், மோர் என கடைசியாகத்தான் பாயசம் வரும். பாயசம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். நிச்சயம் பாயசம் வரும்” என தெரிவித்தார். இதனால் பேரவையில் கலகலப்பு ஏற்பட்டது.