அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்புப் படம்
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு – மீண்டும் நீட்டிக்கப்படுமா?

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது.

webteam

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஜூன் மாதம் 14 ஆம் தேதி உத்தரவிட்டார்.

senthil balaji, ed, madras high court

இந்நிலையில், ,கடந்த ஜூன் 28 மற்றும் ஜூலை 12 ஆம் தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது. அதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மீண்டும்; புழல் சிறையிலிருந்து, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஆஜர்படுத்தப்படும் பட்சத்தில் நீதிமன்ற காவல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.