செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

“எதுக்கும் தயார்தான் நான்”- ஐடி ரெய்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி! #Video

PT WEB

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி பதவிவகித்து வரும் நிலையில் அத்துறை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Minister Senthil Balaji

கரூர், கோவை, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேரளாவின் பாலக்காடு, தெலங்கானா தலைநகர் ஐதராபாத், கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஆகிய இடங்களிலும் சோதனை நீடிக்கிறது. கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. இவர் பொதுப்பணித்துறை சார்ந்த அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஒப்பந்ததாரர்கள் முறையாக வருமான வரி செலுத்தினார்களா? வரி ஏய்ப்பில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

செந்தில்பாலாஜி

இந்நிலையில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, “எனது சென்னை மற்றும் கரூர் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் தம்பிக்கு தெரிந்தவர்களின் வீடுகளில்தான் சோதனை நடைபெறுகிறது. என் வீட்டில் நடந்தாலும், நான் எதையும் எதிர்கொள்ள தயார்தான்! கடந்த 2006 முதல் நானும் என் குடும்பத்தினரும் எந்த தொத்தையும் வாங்கவில்லை” என்று தெரிவித்தார்.