செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை  File Image
தமிழ்நாடு

மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு... புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி!

PT WEB

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நீதிமன்ற காவல்,கடந்த 25ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், அன்றைய தினம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக செந்தில் பாலாஜி ஆஜரானார். அப்போது அவரது நீதிமன்ற காவல் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 3,000 பக்கம் குற்றப்பத்திரிகை கொடுக்கப்பட்டது. மேலும் நீதிபதியிடம், தனது உடல்நிலை குறித்து செந்தில்பாலாஜி தெரிவித்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்தார்.

செந்தில் பாலாஜி

மேலும் ஜாமீன் மனுத் தாக்கல் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டதற்கு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.