சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று முதல் 15 நாட்கள் அவகாசம் வழங்ப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப்பருவமழையின் தீவிரத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் இன்றும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாத நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று முதல் 15 நாட்கள் அவகாசம் வழங்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.