தமிழ்நாடு

அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ்-க்கு ரூ.200 மேல் வசூலிக்கக்கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

webteam

அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ் சேவைக்கு மக்களிடம் ரூ.200க்கு மேல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு கேபிள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர். இந்த செட்டாப்பாக்ஸில் அரசு சார்பில் ஒளிபரப்பப்படும் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந்நிலையில் அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ் விநியோகிஸ்தர்கள் சிலர் அரசு நிர்ணயித்துள்ள தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு கேபிள் செட்டாப்பாக்ஸ் சேவைக்காக மக்களிடம் ரூ.200 மேல் வசூலிக்கும் விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். முன்னதாக ஈரோடு சி.எஸ்.ஐ பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு அரசு மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார்.