கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன் தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை - தாசம்பாளையம் பகுதிக்கு இடையே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர், எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினர். அவ்வழியாக வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விபத்தைக் கண்டதும் உடனே களத்தில் இறங்கி அந்தக் குடும்பத்தை மீட்டார்.
அத்துடன் காயம்பட்டவா்களுக்கு முதலுதவி அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.