தமிழ்நாடு

ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் - செல்லூர் ராஜூ

ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் - செல்லூர் ராஜூ

webteam

ஜெயலலிதா இருந்தால் காவிரி விவகாரத்தில் என்ன செய்யப்படுமோ அதை எடப்பாடி பழனிசாமி செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

காவிரி நீர்ப்பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த வரைவுத் திட்டத்தில் நதிநீர் பங்கீட்டிற்காக 9 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “அதிமுகவின் அழுத்தத்தினால் தான் காவிரி விவகாரத்தில் தற்போது மத்திய அரசு வரைவுத் திட்டம் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய நேரத்தில் முதலமைச்சர் விளக்கம் கொடுப்பார். காவிரி விவகாரத்தில் அனைத்து பணியும் நடந்துள்ளது. ஜெயலலிதா இருந்தால் என்ன செய்யப்படுமோ, அதேபோல் தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். மக்கள் எளிமையாக சந்திக்கக்கூடிய முதல்வராக அவர் உள்ளார்” என தெரிவித்தார்.