தமிழ்நாடு

சின்ன வெங்காயம் விலை உயர்வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

சின்ன வெங்காயம் விலை உயர்வுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்

webteam

சின்ன வெங்காயம் வெளியில் ரூ.200‌, பண்ணை பசுமை கடைகளில் ரூ.125-க்கு விற்கப்படுகிறது, இதை விடக் குறைவாக விற்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய் முதல் 180 வரை விற்கப்படுகிறது. போதிய மழையில்லாமல் வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடாததே இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, ஒருநாளைக்கு 3ஆயிரம் டன் வரவேண்டிய இடத்தில் 30 டன் மட்டுமே வரத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்காரணமாகவே சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கூறும்போது, தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைக்கு சின்ன வெங்காயம் விற்கப்படுகிறது. மழை காரணமாக சந்தைக்கு சிறிய வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டதால், விலை அதிகரித்து விட்டது. சின்ன வெங்காயம் வெளியில் ரூ.200‌, பண்ணை பசுமை கடைகளில் ரூ.125-க்கு விற்கப்படுகிறது. இதை விடக் குறைவாக விற்க முடியாது என்று கூறினார்.