தமிழ்நாடு

"திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் சிலை திருட்டு தடுக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் சேகர்பாபு

webteam

“திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சிலை திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில் சிலைகளை, இங்கு மீண்டும் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதல், கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக ஒற்றுமையுடன் கொண்டாட முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். 20 மாத திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் 430 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 2400 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 2500 கிராமப்புற கோயில்களுக்கு ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் சிலை திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள கோயில் சிலைகளை தமிழகம் கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவகிறது” என தெரிவித்தார்.