அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 பெரிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கும் வகையில், அதன் தொடக்கமாக ’அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம்’ சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கியது.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து முதலைமைச்சர் தெரிவிப்பார் என்று கூறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியானது.
இந்தத் திட்டத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
அதன்படி, நாளை முதல் தமிழகத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 47 கோயில்களில் ’அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற பெயரில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது,