அமைச்சர் சரத்குமார் Pt web
தமிழ்நாடு

போதைப்பொருள் பயன்படுத்தினேனா.? வைரலாகும் வீடியோ.. அமைச்சர் சரத்குமார் விளக்கம்!

2 ஆண்டுக்கு முன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதற்கு விளக்களித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Premkumar S

போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் சில குற்றச்சாட்டுகளை எழுப்பி விவாதித்து வருகிறது. இந்த நிலையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்' என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் முதல்வர் விஜயுடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். 

இந்தசூழலில் தான், தவெக அமைச்சரவையில் இருக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான சரத்குமார், ஐபிஎல் போட்டிகளின் போது சேப்பாக்கம் கிரிக்கெட் போதைப்பொருள் வைத்திருப்பது போன்ற காணொளி இன்று காலை முதல் பரப்பப்பட்டு வருகிறது. இந்தசூழலில் தான், இந்த வீடியோ குறித்தான விளக்கத்தை அமைச்சர் சரத்குமார் சமூகவலைதளங்களில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடக்கும் போது தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தோடு சென்றதாகவும் அப்போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் மாத்திரையை உடைத்து பொடியாக்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பல்லாயிரம் பேர் தனக்கு முன்னும் பின்னும் இருக்க, காவலர்கள் பாதுகாப்பு இருக்க எப்படி ஒரு நபரால் போதைப்பொருளை பயன்படுத்த இயலும்? தன் மீது திட்டமிட்டு இப்படி ஒரு  வதந்தியை சுமத்தி வருகிறார்கள்” எனவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.