பால்வளத்துறையில் பணியிட மாற்றம், புதிய நியமனங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அத்துறையின் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
புதிய பணி நியமணங்களுக்கு இடைத்தரகர்களிடம் பணம் தந்து ஏமாற வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறி விசாரணை செய்துவந்தது அரசு.
தொடர்புடைய செய்தி: அடுத்தடுத்து வெளிவரும் ஆவின் பணி நியமன முறைகேடு: அதிர்ச்சி தகவல்
குறிப்பாக தேனி, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் விதிகளை பின்பற்றாமலும் முறைகேடாகவும் மேலாளர் உள்பட 870 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருந்தது.