தமிழ்நாடு

‘நாட்டை அலங்கோலமாக்க கோலம் போடுகிறார்கள்’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

‘நாட்டை அலங்கோலமாக்க கோலம் போடுகிறார்கள்’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

webteam

கோலம் போடவில்லை, நாட்டை அலங்கோலப்படுத்துவதற்குதான் கோலம் வடிவில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்திற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஓர் அணியாக திரண்டு இருப்பது குறித்த கேள்விக்கு எழுப்பினர். “பாஜகவிற்கு பெருந்தன்மை அதிகமாக இருப்பதன் காரணமாக காங்கிரஸ் ஆட்டம் போடுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று செய்ய முடியாது. குறிப்பாக மம்தா பானர்ஜி பிரதமரை, அமைச்சர்களை கடுமையான விமர்சித்து வருகிறார். இந்தத் தேசத்தின் மீதும் கடுமையான புகாரையும், மத்திய அமைச்சர்கள் மீதும், ஆட்சி மீதும் கடுமையான விமர்சனங்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாகவும், ஜனநாயகத்தின் காவலனாகவும் பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் மோசமான அணியை கூட்டி இந்தியாவில் பிரச்னையை ஏற்படுத்துவதற்கான செயலை ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் கோலம் போடவில்லை, நாட்டை அலங்கோலப்படுத்துவதற்குதான் கோலம் வடிவில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவர்கள் அரசுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை, தேசத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகின்றனர். ஆட்சிக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை இந்திய இறையாண்மைக்கு எதிராக கூறிவருகின்றனர்.

இவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதன் காரணமாகத்தான் அதை தடுக்கின்ற பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. வேறுவழி இல்லாமல்தான் கடைசியில் கோலம் போடுவதில் ஈடுபட்டு வருகின்றனர். திருமாவளவன் மற்றும் கே.எஸ்.அழகிரி அவர்கள் நாட்டை அலங்கோலமாக்க கோலம் போட்டு தொடங்கியுள்ளனர்” என்றார்.