தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அக்கறை அதிகம்: ராஜேந்திர பாலாஜி

webteam

அரசுப்பள்ளி மாணவர்கள் மீது தமிழக அரசு அதிக அக்கறையுடன் செயல்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு இலவச அரசு மடிக்கணியை அமைச்சர் வழங்கினார். பின்னர் பேசிய அவர், அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று தெரிவித்தார். 

அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அரசு பல நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். மற்ற பள்ளி மாணவர்களை விட, அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். காமராஜர் பிறந்த மாவட்டமான விருதுநகர் தொடர்ந்து கல்வியில் முதன்மை இடத்திலிருப்பது பெருமைக்குரிய ஒன்று என்றும் அமைச்சர் பாராட்டினார்.