தனியார் பாலில் கலப்படம் செய்யவில்லை என்பதை உறுதி செய்தால் தூக்கில் தொங்கத் தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி, "தனியார் பாலில் கெமிக்கல் இல்லை என நிரூபித்தால் பதவி விலகத் தயார். ஏன்..தூக்கில் தொங்கவும் கூட தயார். கெமிக்கல் இல்லையென்று அவர்களால் நிரூபிக்க முடியுமா..? நூறு சதவீதம் கெமிக்கல் கலக்கப்பட்டுள்ளது. அது குழந்தைகளின் உயிர் பிரச்னை. அதனை கலக்க வேண்டாம் என்று தான் நான் சொல்கிறேன். பாலில் கலப்படம் என்று சொல்லும் போது மக்கள் பயப்படுவார்கள். அவர்களை எச்சரிக்கை தான் செய்கிறேன். தனியார் கம்பெனிகளை மிரட்டுகிறேன். ஆதாயம் தேட முயல்கிறேன். இதுவரைக்கும் அமைச்சர் என்ன செய்தார் என்றெல்லாம் கேட்கிறார்கள். ஏன் இப்போது கலப்படம் குறித்து தெரிந்தால் சொல்லக் கூடாதா..?. எந்த தனியார் நிறுவனத்திடமும் இதுவரை எந்தவித கையூட்டும் பெறவில்லை. யாரையும் மிரட்டும் நோக்கத்தில் இந்த குற்றச்சாட்டை நான் கூறவில்லை என்று அவர் கூறினார்.