பழனிவேல் தியாகராஜன் pt desk
தமிழ்நாடு

SUCCESS மாடலை எடுத்துவிட்டு FAILURE மாடலை வைக்கச் சொன்னால் ஏற்க முடியுமா? பழனிவேல் தியாகராஜன்

SUCCESS மாடலை எடுத்துவிட்டு FAILURE மாடலை வையுங்கள் என்று சொன்னால் அறிவுடையவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? என்று மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை கல்லூரி மைதானத்தில் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமை நடைபெற்ற இந்த முகாமில் மாநகராட்சி மேயர் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்...

தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட தனிநபர் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மத்திய தொகுதியில் இ-சேவை மையம் தொடங்கி அதன் மூலமாக தீர்வு காண முயற்சி செய்யப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா சொன்னதும் இரண்டு மொழி தான். வட மாநிலங்களில் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக தான் இருக்கிறது. இரண்டாவது மொழியை முறையாக கற்றுக் கொடுத்திருந்தால் இந்த மும்மொழி பிரச்னை வந்திருக்காது.

SUCCESS மாடலை எடுத்துவிட்டு FAILURE ஆன மாடலை வையுங்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா..? அறிவு உடையவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? என்று அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்கேள்வியெழுப்பினார்.