தமிழ்நாடு

எஸ்.வி.சேகரை சந்தித்தது உண்மை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

எஸ்.வி.சேகரை சந்தித்தது உண்மை தான்: பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி. சேகரை நிகழ்ச்சி ஒன்றில் தான் சந்தித்தது உண்மைதான் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

எஸ் வி சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டது தொடர்பாக அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்தச் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டதும், அதில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் அவர் பேசும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியானது.‌ எஸ்.வி. சேகரை சந்தித்தது உண்மைதான் என கூறியுள்ள பொன் ராதாகிருஷ்ணன், அவரை கைது செய்வது காவல்துறையின் வேலையே தவிர தம்முடையது அல்ல என கூறியுள்ளார்.