தமிழ்நாடு

23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு 

23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு 

webteam

கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள தொன்மையான பொருட்கள் வரும் 23ம் தேதி முதல் காட்சிப்படுத்தப்படும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நடைபெற்று வந்த 5ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 13ம் தேதியுடன் முடிவடைந்தன. இதன் முடிவில் இரட்டை சுவர், நீர் வழிப்பாதை, உறை கிணறு, தண்ணீர் தொட்டி, வளைவு சுவர் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 

மேலும் சூது பவளம், நூல் கோர்க்கும் தக்களி, ரௌலட் வகை அணிகலன்கள், பாசி மணிகள், தமிழி எழுத்து பொறித்த மண் பாண்டங்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்களும் கிடைத்தன. இவற்றை வரும் 23ம் தேதி முதல் மதுரை உலக தமிழ்ச்சங்க கட்டட வளாகத்தில் வைத்து காட்சிப்படுத்த உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்