தமிழ்நாடு

அரிச்சந்திரா நதி தூர்வாரும் பணி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு

அரிச்சந்திரா நதி தூர்வாரும் பணி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு

webteam

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அரிச்சந்திராநதி முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரிச்சந்திராநதி முகத்துவாரம் தூர்வாரப்படும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். மழை, வெள்ள நீர் வடிவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேட்டைக்காரனிருப்பு பகுதியிலுள்ள அரிச்சந்திரா நதியின் முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. வெள்ள நீர் வடிய தடையாக இருக்கும் மண்மேடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அந்தப் பணியை ஆய்வு செய்த அமைச்சர், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இதே மழை தொடர்ந்து கடுமையாக இருக்குமானால், பயிர்களின் நிலை பற்றி பின்னர்தான் ஆய்வு செய்ய முடியும். இதுவரை பெய்திருக்கக்கூடிய மழையால் சொல்லும் அளவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறினார்,