அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்து நேரடியாக விவாதிக்கத் தயாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் மூர்த்தி சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவுக்கு பின்னர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 10 ஆண்டு கால ஆட்சியில் எதையும் செய்யாத அதிமுகவினர், 100 நாள் திமுக ஆட்சியை குறை கூறுவதாக தெரிவித்தார்.