Marie Wilson PT Web
தமிழ்நாடு

”ஒரு சவரன் தங்கம்..” அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. மக்களுக்கு மெகா குட் நியூஸ்!

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு; 100 சதவிகித மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்.

Prakash J

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று அறிவித்து வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான ஒதுக்கீடுகள் என்னவென்பது குறித்து இங்குப் பார்ப்போம்..

  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு; அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

  • அண்ணன் சீராக, பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு

  • மூத்த குடிமக்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும் 1 மருத்துவர், 1 செவிலியர் , 1 இயன்முறை மருத்துவருடன் இந்தச் சேவை வழங்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

  • 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு

  • வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு; 100 சதவிகித மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்.

  • கால்நடை மருத்துவ தரமான சேவைத் திட்டத்திற்கு ரூ.122 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் உருவாக்கப்படும்

  • கால்நடைகள் காப்போம் திட்டதிற்கு, அதாவது புதிய கால்நடை காப்பீடுத் திட்டத்திற்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு

  • மீனவர் நலன் உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் பணியில்லாக் கால மீன்பிடி உதவித்தொகை ரூ.6000லிருந்து ரூ.7000 ஆக உயர்வு

  • கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்.

  • கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.23,357 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.9,818 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்; பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவுத் திறன் ஊக்குவிக்கப்படும்.

  • வெற்றி தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு

  • அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு முன்னேப்போதும் இல்லாத வகையில், ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறுவர்

  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • விளையாட்டில் ஆர்வமும், திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உட்பட்ட இளம் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு

  • வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு; இதன்மூலம் 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்