தமிழ்நாடு

6-ஆம் கட்ட கீழடி அகழாய்வு எப்போது ? - அமைச்சர் பாண்டியராஜன் பதில்

webteam

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசிய கருத்தினை பார்த்துவிட்டு பின்னர் பதிலளிப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சர் பாண்டியராஜன் புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “காவல்துறை மட்டுமல்லாது, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் எந்தவிதமான அரசாணையும் தமிழில் இருக்கும். அந்த துறை விரும்பினால் ஆங்கிலத்திலும் இருக்கலாம். விரைவில் அனைத்து துறைகளிலும் தமிழில் அரசாணை வழங்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தெளிவாக உள்ளார். அனைத்து துறைகளிலும் அரசாணை தமிழில் இருக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதன்படி, காவல்துறை நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 

கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வு பணி வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. கீழடியில் கண்றியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க டெண்டர் கோரும் பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி என்ன பேசினார் என்பதை பார்த்துவித்துவிட்டு அது தொடர்பான கருத்தை பேசுகின்றேன்” என்று தெரிவித்தார்.